PTEC News
  • [08/May/2019]
    Examen_Maths_Français_2019
    Nous avons envoyé les convocations par mail et par la poste si vous n'avez pas reçu merci de nous contacter par mail contact@paris-tec.com Planni.. more
  • [16/Apr/2019]
    கேட்டல், பேசுதல், வாசித்தல்
    கல்வி நிலையப் பொதுப் பரீட்சை 2019 தமிழ் பரீட்சைத் திகதிக.. more
View All
PTEC info
Exam news
Examen_Fr_Maths
Rentrer18-19
Contact_us

 

பாரிஸ் தமிழர் கல்வி நிலையம்

   

   லகில்தனக்கென ஒரு நாடற்ற தமிழினம். இன்று விரும்பியோ விரும்பாமலோ உலகெங்கும் வாழத்தலைப்பட்டு விட்டது. விடுதலை வேண்டி போராடும் ஓர் இனத்தின் வரலாற்று வழியில் ஏற்படும் விபத்துக்களால் அந்த இனத்தின் அல்லது சமூகத்தின் அபிவிருத்தப் பாதையில் தடங்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத தொன்றாகின்றது. ஆனால் சமூக அக்கறை கொண்டோர், புத்தி ஜிவிகளின் சேவையால் தடங்கல்கள், சுமைகள் தணிக்கப்படுவது இன்றியமையாததாகும்.

 

தாயகத்திலிருந்து தஞ்சமென வந்த நாம் இங்கு வந்துவுடன் காதிருந்தும் செவிடர்களாகவும், வாயிருந்தும் ஊமைகளாகவும் தத்தளித்தோம். சொந்த மொழி மறந்து அந்நிய மொழியிலேயே சகல துறைகளிலும் செயற்படவேண்டிய ஒரு இக்கட்டான 10ழ்நிலை தோன்றியது. இதே போன்று வரும் காலத்தில் இங்கு வாழும் சிறுவர்கள் தாயகம் திரும்பும் சமயத்தில் தமது தேவைகளையோ, உணர்வுகளையோ வெளிப்படுத்த முடியாமலும், தமது உறவினர்களுடன் நன்றாகப் பேசவோ, பழகவோ முடியாமலும் தவிக்கப்போகும் ஓர் அவல நிலை உருவாகும் என்பதைக் கருத்திற் கொண்டு பலரின் பட்;றிவுகளைக் கொண்டு சிலர் முயற்சியில் புலம் பெயர்ந்து பிரெஞ்சு மண்ணில் வாழும் எமது மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வதற்கென உயர்ந்த நோக்கத்துடன் 31.08.1986 இல் எம்மவர்களால் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கல்வி நிலையம்  பாரிஸ் தமிழர் கல்வி நிலையம என்பதை அறியத்தருகின்றோம்.

 

பாடசாலை ஆரம்பித்த நாட்களில் காலத்தின் கட்டாயமாக பிரஞ்சுமொழி கற்பிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயற்பட்டது. ஆனால் காலப்போக்கில் நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் அசம்பாவிதங்களும் அட்டூழியங்களும் தமிழர்களை ஒட்டுமொத்தமாக இடம்பெயர வைக்கவே தமிழ்மொழி கற்கவேண்டியதன் அவசியத்தை பாடசாலை ஊன்றி உணர்ந்ததினால் பொற்றோர்களை அழைத்து 'தமிழ் கற்றால் பிரஞ்சுமொழி கதைக்கமாட்டார்கள்' என்ற அர்த்தமற்ற எண்ணத்தை விடுத்து தாய்மொழியை முதலில் கற்கவேண்டும்;, பின்பு எத்தனை மொழிகளை வேண்டுமானலும் கற்கட்டும், கதைக்கட்டும். தமிழன் என்ற இனம் அழிய முதற் காரணமாக இருப்பது தமிழ்மொழி அழிக்கப்படுவதேயாகும் என்பதனை நாம் உணருவோமேயானால் நிச்சயமாக நாம் எமது சிறார்கள் தமிழ் கற்பதை விரும்புவோம்.
 

50 வருடங்களுக்கு முன் கேட்பார் அற்று கிடந்த சீன மொழியை உலகம் இன்று ஓடி ஓடி படிக்கிறது. எங்கள் தமிழுக்குக்கூட இந்நிலை வரலாம். எனவே எங்கள் சிறார்களும் தமிழ் அறிவு பெற்றவர்களாக வளரட்டும், தமிழ்மொழி காக்கப்பட்டால்தான், தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடு எல்லாம் பாதுகாக்க முடியும் என உணர்த்தினோம். அத்துடன்  தமிழ்மொழி கற்பிக்க ஆரம்பித்த, காலத்தில் சிறுவர்களை கல்வி நிலையத்திற்கு அழைத்து, தகுந்த தமிழ் ஆசிரியர்களினால் வேதனம் இன்றி விருப்புடன் தமிழ்க்கல்வி பயிற்றுவிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  இப்படியாக தமிழ்மொழி பயிற்றுவிக்கப்பட்டு இன்றைய வளர்ச்சியை அடைந்து. இன்று 12 தரமான சேவையுள்ளம் கொணட ஆசிரியர்களினால் 240 மாணவ மாணவிகள் தமிழ் கல்வி கற்கின்றார்கள். அத்துடன் தமிழ் பேச்சுப்போட்டி, திருக்குறள் மனனப்போட்டி, பாட்டுத்திறன் போட்டி, அது மாத்திரமன்றி பரதம் சங்கீதம் போன்ற அழகியற் பாடங்களும் கற்பிக்கப்படுகின்ன.

                            

ஆங்கில அறிவு இன்றைய அறிவியல் உலகிற்கு மிகவும் அவசியமானதாகும். எமது தாய்மொழியாம் தமிழ்மொழி மூலம் பிரெஞ்சு மொழியை கற்பிக்கும் பாரிஸ் தமிழர் கல்வி நிலையம் தமிழ் சகோதர, சகோதரிகள் ஆங்கில மொழியை வழுவறப் படிக்கவும், பேசவும், எழுதவும் தெரிந்கொள்ள வேண்டும் என்ற பேரார்வத்துடன் ஆங்கில இலக்கணத்தை தமிழ்மொழியின் வாயிலாக தரமான ஆசிரியர்கள் மூலம் அன்று தொடக்கம் இன்றுவரை கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது எனபதினை மகிழ்ச்சியுடன் தெரியத்தருகின்றோம்.

 

அடுத்ததாக இன்றைய உலகில் எதை எடுத்துக் கொண்டாலும் கணினி மயம். இன்று ஒருவருக்கு கணினியை இயகத் தெரியவில்லை என்றால் இது ஒரு பழசு ஒன்றும் தெரியாது என்றும், ஒரு வானொலியை போடத் தெரியாவருடன் இவரை ஒப்பிடுகின்றார்கள். இவற்றை எல்லாம் முனகூட்டியே உணர்ந்த எமது கல்வி நிலையம் இற்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முன்பு எல்லோருக்குமான கணினி வகுப்பை ஆரம்பித்தது என்பதை முதலில் தெரியத்தருகின்றோம். ஆரம்ப காலத்தில் ஒரு கணினி 12 மணவர்கள் என பயிற்றுவிக்கப்பட்டது. பின்னர் கணினி பயின்ற மாணவர்கள் தாங்களாகவே கணினியை சொந்தமாக வாங்கி அதை கல்வி நிலையத்திறகும் கொண்டுவந்து கற்றார்கள். இப்படி படிப்படியாக கணினி வகுப்பு வளர்த்தெடுக்கப்பட்டு, இன்று கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்களில் பலர் கணனியில் மிகுந்த தேர்ச்சி பெற்று வல்லுனர்களாக உள்ளார்கள் என்பதை கூறிக்கொள்கிறோம். அத்துடன் இன்று சகல தொழில்நுட்ப வளத்துடன் மாணவர்கள் கனணி கற்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை எமது கல்வி நிலையத்திற்கு மிகவும் சிறந்த ஆற்றலுள்ள ஆசிரியர்கள் மூலம் கனணி கற்பிக்கப் படுகின்றது என்பதுதான்.

இவ்வாறு காலத்தின் தேவைக்கேற்ற வகையில் தேவையான அனைத்துக் கல்விச் செயற்பாடுகளும் சேவை அடிப்படையில் 29 வருடங்களாக எமது கல்வி நிலையத்தால் நடாத்தப்பட்டு வருவதுடன் தாயகத்திலுள்ள எமது சிறார்களுக்காகவும் சில உதவிகளை தொண்டு நிறுவனங்களுடக அவ்வப்போது வழங்கிவந்துள்ளோம்.

 

அத்துடன் எமது கல்வி நிலையத்தின் விளiயாட்டுக் கழகம் 1990-ம் ஆண்டு ஆரம்பிக்கப்ப்டடு பல வெற்றிகளையும் சாதனைகளையும் தனதாக்கியது.  பிரான்சு நாட்டில் முதல் முதல் நடைபெற்ற மாவீரர் நினைவு மெய்வல்லுனர்; போடடியில் பங்குகொண்டு தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது நினைவில் கொள்ளவேண்டியது. அத்துடன் இன்றுவரை தொடர்ந்து கல்வி நிலையம் மாணவ மாணவிகளுக்கான இல்ல விளiயாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றது.

 

பாரிஸ் தமிழர் கல்வி நிலையம் குறிப்பிட்டவர்களை மட்டும் அங்கத்தவர்களாகக் கொள்ளாமல் ஒவ்வோரு ஆண்டின் இறுதியிலும் நடைபெறும் பொதுச்சபைக் கூட்டத்தில், கல்வி நிலையத்தில் கல்வி கற்ற சேவை நோக்கம்கொண்ட கூட்டுப் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படும் மாணவர்களை இனங்கண்டு அங்கத்தவர்களாகச் சேர்த்துக் கொள்கிறது. இப்படி மாணவர்களாகக் கல்வி நிலையத்தில் சேர்ந்தவர்கள்தான் பின் நிர்வாக சபையிலும் தெரிவுசெய்யபட்டு, இன்று கல்வி நிலையத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மகிழ்சியுடன் கூறிக்கொள்கிறோம்.

 

இன்று கல்வி நிலையம் ஆரம்பிக்கபபட்டு 29-ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. 29-ஆண்டு காலமாக சேவை என்ற அடிப்படையில் எமது மக்கள் பயன்படவேண்டும் என்று சனி, ஞாயிறு தினங்களில் நல்ல முறையில் தமது நேரத்தை செலவிடவேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாரிஸ் தமிழர் கல்வி நிலையம் இந்த 29-வருட காலத்தில், மனித வாழக்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள்போல் பல சோதனைகளையும், சில சமயங்களில் தாங்கொண்ண நிகழ்வுகளையும், கல்லடி, சொல்லடி, தமிழருக்கே உரிய போட்டி பெறாமை, ஒற்றுமையின்மை என பூத்து, காய்த்த மரத்திற்கு ஏற்படும் விளைவுகளையும் சந்தித்தது என்பதையும் நாம்; மறைக்க விரும்பவில்லை.

 

இறுதியாக இமயமலை  மகா பெரிதாக இருக்கலாம், கடுகு சிறிதாக இருக்கலாம், ஆனால் இமையமலைக்குள் இருக்கின்ற அத்தனை அவயவங்களும் கடுகுக்குள்ளும் இருக்கும். அதே போன்று கல்வி நிலையம் சனி ஞாயிறு தினங்களில் மட்டும் சிறிதாக நடைபெற்றாலும் அதற்குள் அனைத்து கல்வி சம்பந்தப்பட்ட விடயங்களும் நடைபெறுகின்றது என்பதை இங்கு வாழும் எம்மவர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருப்பதுடன் தாமும் பயன்பட்டு, மற்றவர்களுக்கும் பயன் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இப்படி செய்கின்றபோது கல்வி நிலையம் மென்மேலும் வளர்ச்சிப பாதையில் சென்று எம்மவர்கள் கூடிய பயனைப் பெறமுடியும்.

இன்று இப்பள்ளியின் வெற்றிக்கு காரனமானவர்கள் அதன் உருவாக்குனர்கள், பெற்றோர்கள், அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், ஆதரவாளர்கள், மாணவர்கள் எனபதை மகிழ்சியுடன்கூறி விவேகமாக சிந்தித்து, நல்லவற்றையே பேசுவோம், நல்லதையே செய்வோம் இவற்றின் மூலம் எம் கல்வி நிலையம் பல்லாண்டு காலம் வாழ வளர வழிவகுப்போம்...

 

நன்றி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

345118 Visitors345118 Visitors345118 Visitors345118 Visitors345118 Visitors345118 Visitors345118 Visitors